பாரம்பரிய நெல் சாகுபடிக்கு ரொக்க பரிசு போட்டியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு




பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து அதிக அளவு உயர் விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள ரூ.100 செலுத்தி தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாகும். பதிவு செய்த விவசாயிகளின் வயலில் வேளாண்மை இயக்குனர் அல்லது அவர்களின் பிரதிநிதி, கலெக்டர் அல்லது அவர்களின் பிரதிநிதி, அங்ககச் சான்றளிப்பு துறை உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் அறுவடை செய்து பெறப்படும் மகசூல் விவரங்களின் அடிப்படையில் பரிசு வழங்கப்படும். மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் தேர்வு பெற்ற விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பாதுகாத்து வரும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்யுமாறு கலெக்டர் கவிதாராமு கேட்டுக் கொண்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments