சிறுபான்மை மக்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் - என்னென்ன தகுதிகள்? முழு விவரம்




தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000 பேருக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கவும்,அதற்காக 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
என்னென்ன தகுதிகள்? முழு விவரம்
  • தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் 
  • தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆண்டுவருமான உச்சவரம்பு ரூ.1,00,000/ ஆக இருத்தல் வேண்டும்.
  • 20 வயது முதல் 45 க்குள் இருக்கவேண்டும்
  • கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments