மணமேல்குடி - மதுரை வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம் விழாவில் கலெக்டர், அமைச்சர் , அதிகாரிகள் பங்கேற்புபுதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்   (16.12.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப
தேவைப்படும் இடங்களில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து வசதி இயக்கப்பட்டு வருகிறது.

 அந்தவகையில் இன்றைய தினம் மணமேல்குடியில் இருந்து மதுரைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இப்பேருந்து மதுரையிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு சிவகங்கை, காளையார்கோவில், திருவாடனை, தொண்டி,SP பட்டிணம், மீமிசல்‌ ,ஜெகதாப்பட்டிணம் , கோட்டைப்பட்டிணம் ,அம்மாப்பட்டிணம்‌ வழியாக மணமேல்குடியை வந்தடையும். 

மேலும் மணமேல்குடியிலிருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு அம்மாப்பட்டிணம்‌, கோட்டைப்பட்டிணம்,ஜெகதாப்பட்டிணம் , மீமிசல்‌, SP பட்டிணம், தொண்டி, திருவாடனை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மீண்டும் மதுரைக்கு சென்றடையும்.  

எனவே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மணமேல்குடியிலிருந்து நேரடியாக மதுரைக்கு செல்ல முடியும்.

 இதனை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனியார் (எ) முகமது அப்துல்லா, ஒன்றியக் குழு உறுப்பினர் சக்தி ராமசாமி, துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, உதவிப் பொறியாளர் கருப்பையா, வட்டாட்சியர் ராஜா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments