கோபாலப்பட்டிணத்தில் பனிப்பொழிவு


கோபாலப்பட்டிணத்தில் பனிப்பொழிவு‌ ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது  
இன்று டிசம்பர் 16 வியாழக்கிழமை காலை  பனிமூட்டம் ஏற்பட்டது . காலை 9 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டது. காலையில் விடிந்த பிறகும் இருள் சூழ்ந்தே இருந்தது.

நேற்று மழை பெய்திருந்ததாலும், இன்று பனி மூட்டமாக இருந்ததாலும் கடும் குளிர் நிலவியது.
 
குளிரை தாங்க முடியாமல் முதியவர்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

காலை 9 மணிக்கு பிறகு மெல்ல மெல்ல பனி விலகி சூரிய ஒளி தென்பட்டது. அதன்பின்னர் வெயில் சுட்டெரித்தது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments