ஜன.3 முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விநியோகம்




ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களான 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 பேருக்கு ரூ.1,088 கோடி செலவில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு அரை கிலோ, நெய், மஞ்சள்தூள், மிளகாய், மல்லித் தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, ரவை, கோதுமை மாவு தலா ஒரு கிலோ, உப்பு அரை கிலோ ஆகியன ஒரு துணிப் பையில் வைத்து வழங்கப்பட உள்ளன. 


கரும்பும் தனியாக வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.71 கோடியே 10 லட்சம் செலவிடப்பட உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திட்டத்தை ஒருங்ணிந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments