வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு பயின்றவர்கள் ஓராண்டு பணியிடை பயிற்சி பெற ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிகிடைத் துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 2020 மார்ச் 1ல் துவங்கிய கட் டுமான பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. இங்கு 100 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவகவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இங்கு, மேலும் பல்வேறு புதிய துறைகள் உருவாக்கப்பட்டு மருத்துவ பேராசி ரியர்கள் நியமிக்கப்பட்டு எள்ளனர். 2022 ஜன.12ல் மருத்துவ கல்லூரி திறக் கப்பட உள்ளது.
இந்நிலையில், வெளி நாடுகளில் மருத்துவ
பட்டம் முடித்தவர்கள் ஒராண்டு மருத்துவபணி யிடை பயிற்சி (ஹவுஸ் சர்ஜன்) நிறைவு செய்ய வேண்டும். இதன்படி வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒராண்டு மருத்துவ பணியிடை பயிற்சி பெற மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள் ளது. இந்த அனுமதியை அடுத்து வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு படித்த இருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி கண் காணிப்பாளர் மலர் வண்ணன் கூறுகையில்,
புதிதாக துவங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூ ரிகளில் மருத்துவ பட்ட படிப்பிற்கு பின்னர் ஓராண்டு மருத்துவ பணியிடை பயிற்சிக்கு (ஹவுஸ் சர்ஜன்) வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு முடித்த வர்களும் சேர மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 பேரை சேர்த்துக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி ரஷ்யாவில் மருத்துவ பட்டப்படிப்பு முடித்த 3 பேர் தற்போது ஓராண்டு மருத்துவ பயிற்சி பெறசேர்ந்துள்ள னர்.இவர்களுக்கு முதல் ஒரு வாரம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் தலா 2 வாரம் வீதம் பயிற்சிக்கு அனுப்பப்படுவர். இக்காலகட்டத்தில் காய்ச்சல் முதல் வீரியம், நாள்பட்ட நோய் பாதித்த அனைத்து தரப்பு மக்களுக்கும் சிசிச்சை அளிக்கும் விதம் குறித்து பயிற்சி பெற்று மருத்துவர் பணிக்கு தகுதி உடையவர் என சான்றளிக்கப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.