கறம்பக்குடி அருகே குளங்கள் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆய்வுகறம்பக்குடி அருகே உள்ள மழையூர் மாங்குளம், நெடுங்குளம் ஆகிய நீர்நிலைகளை சிலர் ஆக்கிரமித்து நெல், தர்பூசணி, தென்னை மற்றும் தைல மரங்களை பயிரிட்டு உள்ளனர். தொடர் மழை பெய்தும் குளங்களில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டனர். இதைதொடர்ந்து வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் முன்னிலையில் நில அளவையர்கள் 2 குளங்களின் எல்லைகளை அளவீடு செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குளத்தின் பரப்பு உரிய அளவீட்டின்படி விரிவுபடுத்தப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments