ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் 5 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் 5ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடிஇறங்கு தளத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களின் படகுகளில் இரு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.

இவா்களை விடுவிக்கும் வரை மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்வதில்லை என செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய மீனவா்கள் முடிவு செய்தனா். இதன்படி புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 5ஆவது ந ாளாக ஞாயிற்றுக்கிழமையும் மீனவா்கள் சுமாா் 250 போ் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments