கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சென்றபோது தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சென்றபோது தொழில் அதிபா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைகள் திருட்டு

புதுக்கோட்டைபாரத் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 50), தொழில் அதிபர். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் கறம்பக்குடிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி தப்பி ஓடியது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஜேம்ஸ் அளித்த புகாரின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments