நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பில் கோபாலப்பட்டிணத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நல்ல நிா்வாக வார மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்!! மனுக்கள் அளிக்க டிச.25-ம் தேதி கடைசி நாள்!!நாட்டாணிபுரட்சிக்குடி ஊராட்சி சார்பில் கோபாலப்பட்டிணத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நல்ல நிா்வாக வாரம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

நமது நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கொண்டாடுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் 20.12.2021 முதல் 25.12.2021 வரை கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வழங்கி தீர்வு காணலாம்  என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறிப்பு: மனுவை கொடுத்த பிறகு ஒப்புகை சீட்டு வாங்கி கொள்ளவும்.

தகவல்: 
அ.அபுதாஹிர், அ.சாதிக் பாட்ஷா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments