வடகாடு பகுதியில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியதுநெல்லையில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்றின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழகமெங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதனை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை இடிக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் கணக்கெடுப்பில் விடுபட்ட பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களையும் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகாடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக தற்போது வடகாடு அரசு மேல்நிலை பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்களை விடுமுறை தினத்தை பயன்படுத்தி இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments