போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டையில் சாராயம், போதை பொருட்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு அறிக்கையினை கலெக்டர் வெளியிட்டார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி சென்றனர். 

ஊர்வலத்தில் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. ஊர்வலம் கீழராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக சென்று நகர்மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, உதவி ஆணையர் (கலால்) மாரி, நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதை தடுக்கவும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. போதை பொருட்கள், குட்கா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments