வேள்வரையில் நாளை டிச.29 விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் சிறப்பு முகாம்! மீமிசல் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்!!தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தி பொங்கல் 2022க்குள்ளாக பொது மக்களின் குறைகளை முழுமையாக களைந்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு தாலுகாக்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும்,

சிறப்பு முகாம் நடத்தப்படும் நாள், வருவாய் கிராமம் (ம) இடம், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் முன்கூட்டியே விளம்பரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா வேல்வரை கிராமத்தில் மாண்புமிகு முதமைச்சர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க வருகின்ற  29-12-2021 (புதன்கிழமை ) அன்று பட்டா கணினி திருத்தம் சிறப்பு முகாம் வேல்வரை கிராமத்தில்   நடைபெறும்  என  கிராம நிர்வாக அலுவலர் அறிவித்து உள்ளார்கள்.

எனவே மீமிசல் கோபாலப்பட்டிணம் கிராமம் மற்றும் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பொது மக்கள் நடைபெற உள்ள பட்டா கணினி திருத்தம் சிறப்பு முகாம்மை பயன்படுத்தி பயன் பெற்று கொள்ளுமாறு தெரியப்படுத்தி கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments