தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காட்டில் படகு சவாரி செய்ய மக்கள் ஆர்வம்






காரங்காட்டில் படகு சவாரி செய்ய பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
 
சுற்றுலா பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு உள்ளது. இந்த கிராமத்தில் இயற்கை தந்த கொடையாக சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன. 

மேலும் இந்த சதுப்பு நில காடுகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கவும், வசிக்கவும் உகந்த இடமாக கருதி இங்கு பல நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பறவைககளை காணவும் தினமும் சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருகின்றனர்.
இதனால் வனத்துறை, கிராம மக்களுடன் இணைந்து இங்கு சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் செயல்படுத்தி வருகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் மூலம் படகு சவாரி நடந்து வருகிறது. 

பாதுகாப்பு கவசம்

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து தினமும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வமுடன் இங்கு குவிந்து வருகின்றனர். 

இந்தநிலையில் வருகிற புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் கட்டுப்பாட்டு விதிகளுடன் பொதுமக்களுக்கு படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி பார்த்தல், போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உயிர் பாதுகாப்பு கவசத்துடன் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக படகு சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பொதுமக்கள் படகு சவாரி செய்வதற்கும், உணவு வசதிக்கும் சூழல் சுற்றுலா மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். 

முன்பதிவு

 முன்பதிவு அடிப்படையில் சுவையான மீன் சாப்பாடு, நண்டு சூப், கணவாய் கட்லெட், நன்னாரி சர்பத் போன்றவை சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவோடு இங்கு உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதின் நோக்கத்தையும் புரிந்துகொள்ள இந்த சூழல் சுற்றுலா வழிவகுக்கும்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments