ஆவுடையார்கோவில் நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா
ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் ஆமாஞ்சி துரையரசபுரம் இடையன் காடு, செவிடன்காடு, கீழ்காத்தி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பனைவிதை விதைத்தல், மரக்கன்றுநடுதல், உழ வாரப்பணி மற்றும் தூய்மைப் பணிகள், இடையன் காடு துரையரசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் வெள்ளையடித்தல் மற்றும் இடையன்காடு விநாயகர் கோவிலில் சுவர்எழுப்புதல் போன்ற நாட்டு நலப்பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றினர். தொடர்ந்து ஆமாஞ்சி ஊராட்சி துரையரசபுரம் சமுதாயக் கூடத்தில் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஸ்வரி சண்முக நாதன் மற்றும் ஊராட்சி மன்றதலைவர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரையரசபுரம் கடைவீதியில் சாலையோரம் பூங்கா ஏற்படுத்த வண்ண பூச்செடிகள் அமைத்து கொடுக்கப்பட்டது. முன்னதாக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மேனகா வரவேற்று பேசினார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments