அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் 2 நாள் பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். கணிதவியல் துறைத் தலைவர் கிளாடிஸ் முன்னிலை வகித்தார். சென்னை சிகரம் அறக்கட்டளை பொருளாளர் சக்திவேல் தேர்வாணையத் தேர்வு எழுத மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வழிமுறைகள் பற்றி கருத்துரையாற்றினார். மேலும் காணொலி காட்சி மூலமாக விளக்கி கூறப்பட்டது. 1500, மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள், சென்னை சிகரம் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொன்டனர். முன்னதாக கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் மோகனா, அபிநயா, சூர்யா ஆகியோர் வரவேற்றனர். முடிவில் பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.
.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments