கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்
கால்நடை பராமரிப்பு துறையால் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.அதன்படி தேர்வு துணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட கால்நடை பண்ணை வளாகம், மச்சுவாடி, தொழிற்பேட்டை (அஞ்சல்) புதுக்கோட்டை - 622 004 என்ற முகவரியில் 2022 ஜனவரி 7-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை (8, 9, 13, 14, 15, 16, 18 மற்றும் 23 ஆகிய 8 நாட்கள் நீங்கலாக) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும நேர்காணல் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்படவுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
 விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்பாணை கிடைக்க பெறவில்லை என்றால் அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நேர்முக அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  அவர் கூறியுள்ளார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments