ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?




தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், அழகு நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் , துணிக்கடைகள், நகைக் கடைகள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தும், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.


மேலும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்படுகிறது. அனைத்து பொருட்காட்சிகள், புத்தக கண்காட்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படவும் தடை விதிக்கப்படுகிறது.



புதிய கட்டுப்பாடுகள் சில வரிகளில்:

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு.

ஜன.10ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை 


 
உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி 

திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி

மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி 

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும் 

திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி

அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments