போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5-ந் தேதி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திட தேவையான பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர போட்டி இதழ்கள் மற்றும் பத்திரிகைகள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2 மற்றும் தொகுதி-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக வருகிற 5-ந் தேதி முதல் நேரடியாக நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலைநாட்களில் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேலும் பயிற்சி வகுப்புகளின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments