கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு 




கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.  அதில், பேரிடர் மேலாண்மை சட்டபிரிவு 12 உட்பிரிவு 3  கீழ் பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்குக் குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளதாகக்  குறிப்பிட்டு இருந்தார்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரம் சிகிச்சை பெற்றவர்களுக்கு 4 ஆயிரத்து 300 ரூபாயும் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின்2016 ம் விதிமுறைகள் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், நேற்றுவரை கொரோனாவால் தமிழகத்தில் 36,200 பேர் இறந்துள்ளதாகக் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.50,000 இழப்பீடு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments