புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த வாவரிசி மரம் இருந்து வந்தது. இந்த வாவரிசி மரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், மாணவர்களுக்கும் நிழல் தரக்கூடியதாக இருந்தது. அது நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திங்கட்கிழமை 29/11/202 வேரோடு விழுந்தது. இரவு நேரத்தில் நடந்ததால் இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த பதிப்பு இல்லை.
மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருவோரை வரவேற்கும் வண்ணமாக கம்பீர தோற்றத்துடன் காணப்பட்டு வந்த வாவரிசி மரம் வீழ்ந்திருப்பதை அப்பகுதி மக்கள் கவலையோடு பார்த்து செல்கின்றனர்.
மரம் வீழ்ந்து உள்ளதால் அந்த பாதையில் செல்லும் வாகனங்கள் போக முடியாமல் உள்ளது.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கஜா புயலின் போது கடற்கரை பள்ளிவாசல் அருகே இருந்த ஆலமரம் சாய்ந்தது. அதைப்போன்று கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவுலியா நகர் நுழைவாயிலில் பழைமையான ஆலமரம் சாய்ந்தது. தற்போது இந்த வாரிசி மரம் சாய்ந்துள்ளது.
எனவே வளர்ந்த மரத்தை அகற்றுவது எளிது, ஆனால் அதை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும். அந்த அடிப்படையில் நன்கு வளர்ந்த மரம் சாய்ந்தால் அதை அதே இடத்தில் ஊன்றி திரும்பவும் வளர்த்து எடுக்க ஊரில் இருக்க கூடிய சமூக நல அமைப்புகள் மற்றும் பொது நல அமைப்புகள் முன்வர வேண்டும்.
நமது ஊரை பசுமையாக மாற்ற நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்ப்போம்.
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.