இதுவரை கண்டிராத வேகத்தில் பரவும் ஒமிக்ரான் ஒமைக்ரான் எளிதாக நினைக்காதீர்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், உலகின் பலநாடுகளுக்குப் பரவிவிட்டது, இதுவரை 70 நாடுகளுக்களும் அதிகமாக பரவியுள்ளது. லேசான பாதிப்புதான் இருக்கும் என்று யாரும் எளிதாக நினைக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலகளவில் 77 நாடுகளுக்குப் பரவிவிட்டது, உண்மையில் இன்னும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் பரவல் இருக்க வேண்டும், அது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.

இதற்கு முன் நாங்கள் பார்த்திராத வகையில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது.
உலக மக்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு லேசானதாக இருக்கும் இருக்கும் என உதாசினப்படுப்படுத்துகிறார்கள் என்பது கவலையாக இருக்கிறது.

உறுதியாகச் சொல்கிறோம், எங்களுக்குத் தெரிந்தவரையில், இந்த வைரஸ் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். ஒமைக்ரானால் உடல்நலப் பாதிப்பு குறைவாக இருந்தாலும், அதன்பரவல் நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து நாட்டின் சுகாதார அமைப்புமுறையேயே செயலிழக்கச் செய்துவிடும்.

மக்கள் தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசிக்குபதிலாக முகக்கவசம், தடுப்பூசிக்கு பதிலாக சமூலவிலகல், தடுப்பூசிக்கு பதலாக திறந்தவெளியிடம், கைகளை அடிக்கடி கழுவுதல் என்று இல்லாமல் அனைத்தையும் கடைபிடிக்க பிடிக்க வேண்டும் தடுப்பூசியை கண்டிப்பாகச் செலுத்தவேண்டும். அனைத்தையும் தொடர்ந்து, சிறப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருக்கும் நாடுகளில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசியும்சிறப்பாகச் செயல்படுமா என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரி்க்கும்போது, மருத்துவமனையில் பாதிக்கப்படுவோர் மற்றும் அது தொடர்பான உயிரிழப்புகள் அதிகரி்க்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments