கோபாலப்பட்டிணத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை முகாம் நடத்த வேண்டும் - கிராம மக்கள் கோரிக்கை!!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரும்பாலானோர் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி தோரும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை எடுப்பதற்கான முகாம் நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ செலவை ஈடு செய்யும் வகையில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் கலைஞர் காப்பீடு திட்டம் துவங்கப்பட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மருத்துவ செலவு அதிகமாக உள்ள பெரிய, பெரிய நோய்கள் எல்லாம் தீர்க்க இந்த திட்டம் உதவியாக இருந்தது.இத்திட்டம் அறிமுகமான காலக்கட்டத்தில் கிராமங்கள் தோரும் முகாம் அமைக்கப்பட்டது. 

கடந்த சில வருடங்களாக போதிய கவனம் செலுத்தாததால் இந்த காப்பீடு அட்டை இல்லாதவர்கள் சிரமப்படுகின்றனர். அதனால் ஊராட்சி தோறும் முகாம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அசாருதீன் கூறியதாவது,

திடீர் நோயால் பாதிக்கப்படுபவர்கள் புதுக்கோட்டைக்கு சென்று காப்பீடு அட்டை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் காப்பீடு அட்டை பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதால் அனைத்து குடும்பத்தாரும் காப்பீடு எடுக்கும் வகையில் கிராமங்கள் தோரும் காப்பீடு அட்டை முகாம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments