புதுக்கோட்டையில் தந்தையின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்த மகன்தந்தை உயிரிழந்த சம்பவம் கேட்டு மனமுடைந்து தந்தையின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்த மகன்.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கே.ஆர் சுப்பையா. இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சசிகுமார் கம்பெனி வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்தார்.

அப்போது சசிகுமாருக்கு அவரது தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக வெளிநாட்டில் இருந்த சசிகுமார் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்று கருதி பெங்களூரிலிருந்து ரூ. 5 லட்சம் வாடகை கொடுத்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாலை வந்து இறங்கினார்.

பின்னர் புதுக்கோட்டையிலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தென்னங்குடிக்கு புறப்பட்டார்.

பெங்களூரில் இருந்து சசிகுமார் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடுத்துவந்த தனியார் ஹெலிகாப்டருக்கு தேனியிலிருந்து வெள்ளை நிற பெட்ரோல் எடுத்து வந்து நிரப்புவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு தயாராக இருந்த வேளையில் வானம் மேகமூட்டத்துடன் வானிலை சரியாக இல்லாததால் ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டரை இயக்கி வந்த பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோரை புதுக்கோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் இன்று காலை வானிலை சரியானதும் ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments