எப்பொழுது மாறும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் அவல நிலை? நடவடிக்கை எடுப்பாரா வட்டார வளர்ச்சி அலுவலர்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் பெய்த மழையின் போது பழைய தூம்புகள் ஏற்கனவே சேதமடைந்து இருந்த காரணத்தால் மழைநீர் வெளியேறாமல் இருந்தது.

இந்நிலையில் நீரை வெளியேற்றுவதற்கு பிரதான சாலை உடைக்கப்பட்டு வெட்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலும் புதிய தூம்புகள் புதைக்கப்படாமலும் உள்ளது.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விட்டு நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் போதும், குழந்தைகளும், முதியவர்களும் பள்ளத்தில் விழும் ஆபத்து தொடர்கிறது. ஊரின் முக்கிய சாலை பல நாட்களாக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கிறது என தெரியவில்லை?


ஊராட்சி மன்ற தலைவியின் கணவரின் தலையீட்டால் ஊராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி விட்டது. வட்டார வளர்ச்சி அலுவலரும் மாவட்ட நிர்வாகமும்  உடனடியாக தலையிட்டு வடிகால் தூம்பை சரி செய்யம் படி கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் ஊர் பொதுமக்களால் சாலை மறியல் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

இப்படிக்கு
B.சேக் தாவூதீன்
மாவட்ட தலைவர் 
மனிதநேய மக்கள் கட்சி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments