பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபாலப்பட்டிணம் திமுக கழக கிளை செயலாளர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரனை சந்தித்து மனு அளிப்பு!கோபலப்பட்டிணத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கிளை கழக செயலாளர் அப்துல் சத்தார் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரனை சந்தித்து 06.12.2021 திங்கட்கிழமை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

எங்கள் ஊர் நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்தில் உள்ளது. தரம் உயர்த்தி பேரூராட்சி ஆக்க வேண்டும், எங்கள் ஊருக்கு நிழல் குடை போலீஸ் ஸ்டேஷன் பழைய கட்டிடத்திற்கு அருகாமையில் அமைத்து தர வேண்டும், பழைய சாலையை புதுப்பித்து தரமாக அமைத்து தர வேண்டும், ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் பழுதாக உள்ளது, ஊரில் சில பகுதிகளில் குடி தண்ணீர் வசதி வாய்ப்பு இல்லை குடிதண்ணீர் வசதி வாய்ப்பு செய்து தர வேண்டும், மின்சாரக் கம்பி பழுதாகி உள்ளது புதிய கம்பி மாற்றி தர வேண்டும், H.D. போஸ்ட்10 பழுதாகி உள்ளது அதை உடனே அகற்றி புதிய போஸ்ட் அமைத்து தரவேண்டும், ஆரிபு கடை அருகில் உள்ள 250 HEAVY டிரான்ஸ்பார்ம் பலமுறை பழுதாகி அருகில் உள்ள மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது அதனை இடம் மாற்றி அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments