இடிந்து விழும் நிலையில் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை! அச்சத்தில் மாணவர்கள்!!கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்கு பயின்றுவரும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இங்குள்ள கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி கான்கிரீட் மேற்கூரை, சிமென்ட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.கழிப்பறை கட்டடத்தின் சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சேதமடைந்த கழிப்பறை கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்னொரு நெல்லை சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments