புதுகையில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!



புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 120-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர். மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. 

முன்னதாக தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் முத்துராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகண்டன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments