கிருஷ்ணாஜிபட்டினம் அரசு பள்ளியை சூழ்ந்துள்ள தண்ணீர் வெளியேற்ற மாணவர்கள் கோரிக்கை!!கிருஷ்ணாஜிபட்டினம் அரசு பள்ளியை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த கிருஷ்ணாஜிபட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியில் பெய்து வந்த கனமழையால் பள்ளியை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது மழைநீரில் நடந்து செல்கின்றனர். இதனால் மாணவர்களின் சீருடைகள் தண்ணீரில் நனைந்தபடி வருகின்றனர். சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை.

மழைநீர் ஒரே இடத்தில் அதிக நாட்கள் கிடப்பதால் நீர் முழுவதும் கருப்பாக மாறி புழுக்கள், கொசுக்கள் பெருகி மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments