கோட்டைப்பட்டிணத்தில் மீன் ஏலம் விடும் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணமேல்குடி தெற்கு ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டிணத்தில் ரூ. 1.70 கோடியில் மீன் ஏலம் மற்றும் வலைகள் உலா்த்தும் கூடம் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்து, பூமி பூஜையை அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.டி. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். ஊராட்சி ஒன்றியம், வருவாய்த்துறை மற்றும் மீன்வளத் துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments