வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் `ஸ்மார்ட்' வகுப்பறை ஏற்படுத்தி கொடுத்த முதன்மை கல்வி அதிகாரி!



புதுக்கோட்டை ஒன்றியத்தில் வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்று தற்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சாமி.சத்தியமூர்த்தி. இவர் தான் பயின்ற வளவம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினார். அந்த வகையில் அப்பள்ளிக்கு தனது சொந்த செலவில் ரூ.2 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஸ்மார்ட் டி.வி. வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இதன் திறப்பு விழாவிற்கு சின்னத்துரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஸ்மார்ட் டி.வி.யை இயக்கி வைத்து பேசுகையில், என்னை ஆளாக்கின பள்ளிக்கு நான் செய்கிற கடமையாக இதை நினைக்கிறேன். 

இந்த பள்ளிக் கூடத்தில் படித்துதான் நான் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக வந்து நிற்கிறேன். அந்த நன்றிக் கடன் தான் நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. இப்பள்ளி மென்மேலும் உயர இன்னும் பல உதவிகள் செய்வேன். 

இப்பள்ளி மட்டுமல்ல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உதவிகள் செய்வேன் என்றார். விழாவில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா, பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொன்னழகு, மகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments