அறந்தாங்கியில் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நல அரசு விடுதிகளுக்கு சேர்க்கை தேர்வுக்குழு கூட்டம்






புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சீர்மரபினர் அரசு விடுதிகளுக்கு மாணவ மாணவியர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு கூட்டம் அறந்தாங்கி வட்டாச்சியர் அலுவலகத்தில் துறை துணை ஆட்சியர் முத்தமிழ் செல்வன் தலைமையில்  நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்டணமில்லா உண்டு உறைவிடமாக செயல்படும் 13 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அரசு விடுதிகளுக்கு 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான காலியிடங்களுக்கான சேர்க்கை தேர்வுக் குழு கூட்டம் டிசம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் புதுக்கோட்டை மாவட்ட நல அலுவலரும் தேர்வுக்குழு தலைவரும் துணை ஆட்சியருமான முத்தமிழ்செல்வன் தலைமையில்  அறந்தாங்கி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தேர்வு குழுவில் பெற்றோர் இல்லாத ஏழ்மை நிலையில் தொலைவிலிருந்து பள்ளிக்கு செல்லும் நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் உள்ள விடுதிகளுக்கு தகுதி உடையவர்கள்  தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்கள்.

முன்னதாக இதற்குரிய விண்ணப்பம் அந்தந்த விடுதிகளில் பெற்று உரிய சான்றிதழ் இணைத்து விடுதிகளின் காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடம் கொடுத்து பதிவு செய்துள்ள விண்ணப்பங்கள் இந்த தேர்வுக்குழு கூட்டத்தில்  சரிபார்க்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசாணை 42. நாள் - 29.06.1992 மற்றும் அரசாணை 39. நாள் - 10-04-2012 ஆகியவற்றில் கண்டுள்ள விதிமுறைகளின்படி
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன.

இத்தேர்வுக்குழுவுக்கு துறை துணை ஆட்சியர் தலைவராகவும் சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  தொகுதி செயலாளராகவும் ஒவ்வொரு விடுதிக்கும் காப்பாளர் அல்லது காப்பாளினி விடுதி செயலாளராகவும் சம்பந்தப்பட்ட ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர், சமூக ஆர்வலர் என நான்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் கொண்ட குழு விண்ணப்பங்களை சரிபார்த்து இறுதியாக அறிவிப்பு செய்தார்கள். தகுதி இருந்தும் இடமில்லாமல் இருக்கும் விண்ணப்பதார்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தால் பின்னர் அவர்களும் வரிசைபடி அழைக்கப்படுவார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவரான கவிதா ராமு உத்தரவிடப்பட்டு கூட்டப்பட்ட இத்தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட சீர்மரபினர் நல அலுவலரும் துணை ஆட்சியருமான முத்தமிழ் செல்வன் தலைமையில் கடந்த நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை முறையே புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, திருமயம், விராலிமலை, ஆலங்குடி ஆகியவற்றை இறுதியாக அறந்தாங்கியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேர்வுக்குழு உறுப்பினர்களான அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகநாதன், துணை பெருந்தலைவர் பொன்.கணேசன், மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியார் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் வீராசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கூடலூர் முத்து, நிலையூர் சரவணன், ஆமஞ்சி தேவதாஸ் காந்தி, பஷிர் அலி, முனைவர் முபாரக் அலி, சுப்பிரமணிய புரம் ராஜேந்திரன், தென்றல் கருப்பையா, பஞ்சாத்தி நாகமுத்து உள்ளிட்டோரும் விடுது காப்பாளர்கள் ஸ்டீபன், சந்தானலெட்சுமி, காளிதாஸ், சுமதி, வேலாயுதம் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments