புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை யாழினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் 21 - நாட்களுக்குள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தகவல்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி பேருந்து நிறுத்தத்தில் பிறந்து சில மணிநேரங்களே ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்று 23.07.21 அன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டடுக்கப்பட்டது.
இந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று பெயரிடப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் மூலம் மதுரை மாவட்டம், அழகு சிறையில் உள்ள கிளாரிசன் கருணை இல்லம் என்ற சிறப்பு தத்து நிறுவனத்திடம் தங்கவைத்து பாரமரிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் குழந்தை யாழினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் 21 - நாட்களுக்குள் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு குழந்தைகள் நலக் குழுவின் தடையில்லா சான்று வழங்கப்படும் என்பதனை இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இக்குழந்தை பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படை வீரர்கள் மைய வாளகம், கல்யாணராமபுரம் 1-ஆம் வீதி, புதுக்கோட்டை - 2 என்ற முகவரிக்கும், 04322-221266 என்ற தொலைபேசி, 8056431053 என்ற அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, விடுத்துள்ள செய்தி குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.