ஆவுடையார்கோவிலில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி!



ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவுடையார்கோவில் நான்கு வீதியில் நடைபெற்றது.

இதில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதற்கு கல்லூரி முதல்வர் ரா.கண்ணன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை பேராசிரியர் பழனிதுரை விழிப்புணர்வு கருத்துரையாற்றினார். 

முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments