அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு: அமைச்சர்கள், எம்.பி. பங்கேற்பு!!அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா அறந்தாங்கியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை வகித்து சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆவுடையார்கோவில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து வரவேற்றார். 
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்புராமு, பொய்யாதநல்லூர் சலீம், ஆவுடையார்கோவில் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் செல்லமுத்து உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் அறந்தாங்கி பசீர்அலி நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments