உத்ரா அறக்கட்டளையின் சார்பில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை உறவுகளுக்கு சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது வழங்கி கெளரவிப்பு.!உத்ரா அறக்கட்டளை சார்பில் புன்னகை அறக்கட்டளை உறவுகளுக்கு விருது வழங்கி சிறப்பிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கியை தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கடலூர், மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் புன்னகை அறக்கட்டளை என்ற பெயரில் அதன் நிறுவனர் தலைவர் ஆ.சே.கலைபிரபு தலைமையிலான சிறந்த சமூக சேவகர்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பான சேவைகள் செய்து வருகின்றனர்.

புன்னகை அறக்கட்டளை உறவுகளின் 18 பேருக்கு சேவைகளைப் பாராட்டி திருச்சியில் நடைபெற்ற உத்ரா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவில் உத்ரா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனருமான ஹரிஉத்ரா மற்றும் உளவியல் மருத்துவர் புவனா சரவணன் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், சிறந்த ஆசிரியர்கள், மிக சிறந்த மாணவர்கள், தன்னார்வலர்கள், திரைத்துறையினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments