ஆவுடையார்கோவிலில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்!ஆவுடையார்கோவிலில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான வேலை உத்தரவு வழங்குவதற்கான கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பெரியசாமி தலைமையிலும், ஒன்றியக்குழுத் தலைவர் உமாதேவி முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் பெரியசாமி பேசுகையில், இந்த திட்டத்தில் வீடு கட்ட வேலை உத்தரவு பெற்ற அனைவரையும் விரைந்து வீட்டு வேலைகளை முடிக்க ஊராட்சி தலைவர்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments