திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் சிறுநீரக கோளாறால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால இளைஞரின் தாயாரே மகனுக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார். அதன்படி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதையடுத்து வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை பிரதிபலனாக தாயும் மகனும் நலமுடன் இருப்பதாக தற்போது மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள மருத்துவமனை முதல்வர் வனிதா, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் உடலில் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் முதல் முறையாக இந்த மருத்துவமனையில் உயிருடன் உள்ள ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டு மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 19 வயது மகனுக்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக வழங்கிய லால்குடி பகுதியை சேர்ந்த தாய்க்கும், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.