மணமேல்குடியில் மர்மமாக இறந்துகிடந்த 10 ஆடுகள்-போலீசார் விசாரணை!மணமேல்குடியில் மர்மமான முறையில் 10 ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வெள்ளூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான 8 ஆடுகள், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் என மொத்தம் 10 ஆடுகள் வயல் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றுபோது, வயல் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. 

இது சம்மந்தமாக மணமேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments