ஒரு ஆண்டை கடந்த கோபாலப்பட்டிணம் TNTJ கிளையின் பள்ளிவாசல்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 16 மே 2004 உருவாக்கப்பட்டது. பிறகு தமிழகம் முழுவதும் கிளை, நகர், பேரூர், மாவட்ட அளவில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு பொதுசேவை மற்றும் சமூக சேவைகளை செய்து வருகிறது.

கோபாலப்பட்டிணம் TNTJ கிளை உருவான வரலாறு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தில் TNTJ கிளை  உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் மக்களுக்கு சேவைகள் செய்வது வருகிறது. 2015-ஆம் ஆண்டு ஆரிப் கடை அருகே மர்கஸ்  தொடங்கப்பட்டு தொழுகை, பயான்கள் மற்றும் சேவைகள் செய்து வந்தது.

புதிய பள்ளிவாசல் திறப்பு

கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக  25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பமானது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக (25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று ஸபா தெரு 3-ம் வீதியில் புதிய மர்கஸ் திறக்கப்பட்டது.இந்நிகழ்வில் நண்பகல் 12.50 மணியளவில் ஜுமுஆ உரை சகோ.MS.சுலைமான், மேலாண்மைக் குழு தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்த புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பம் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் ஊர் மக்கள் அருகாமையில் உள்ள ஊர் மக்கள், பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக 25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மார்க்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு TNTJ மேலாண்மைக் குழு தலைவர் MS சுலைமான் அவர்கள் பதிலளித்தார்.









தகவல்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments