நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசி போட்டு தூங்கலாமா?
எல்லோரும் தங்கள் காரில் ஏ.சி. உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். கார் ஓட்டும் போது ஏ.சி. உபயோகிப்பது தவறல்ல.

ஆனால் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏ.சி. போட்டு உறங்குவது ஆபத்தில் முடிந்துவிடும். பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏ.சி. போட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கார் என்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது வரும் புகையில் கார்பன் மோனாக்சைடு வெளியேறும்.

அவ்வாறு வெளியேறும் கார்பன் மோனாக்சைடு பயர் வால், காரின் அடிப்பகுதி வழியாக காரினுள் வர வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு உள்ளே வரும் கார்பன் மோனாக்சைடை நாம் சுவாசிக்கும் போது நம் ரத்தத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் குறைவாகக் கிடைத்து நமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, காரினுள் ஏ.சி.யை போட்டு தூங்க நேர்ந்தால் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்து உறங்குவது நல்லது. அதாவது வெளிக்காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் இருந்தால் நச்சு பாதிப்பு குறையும். நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏ.சி. பயன்படுத்தும் போது, ரீசர்க்குலேஷன் மோடில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments