ஆவுடையார்கோவில், இலுப்பூரில் பட்டா மாறுதல் குறித்த சிறப்பு முகாம்
ஆவுடையார்கோவில் தாலுகாவில் பட்டா மாறுதல் குறித்த சிறப்பு முகாம் ஆவுடையார்கோவில் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சாலமோன் முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமில் பட்டாவில் பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். முகாமில் கிராம உதவியாளர் வேத செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலுப்பூர் தாலுகா மதியநல்லூரில் நடைபெற்ற முகாமுக்கு ஆர்.டி.ஓ. தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தாசில்தார் முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல் தொடர்பாக 50 மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments