திருச்சி, புதுக்கோட்டையில் கால்பதித்த ஒமைக்ரான்; தலா ஒருவருக்கு பாதிப்பு கொரோனாவுக்கு 2 பேர் பலி
திருச்சி, புதுக்கோட்டையில் முதன் முதலாக தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

தலை தூக்கும் ஒமைக்ரான்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஒரு புறம் படிப்படியாக குறைந்து வந்தாலும், அடுத்தபடியாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று தலை தூக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் நேற்றுவரை 118 பேர் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

ஒமைக்ரான் 2 பேருக்கு உறுதி

இந்த நிலையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. அந்த வார்டில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது சளி மாதிரி எடுக்கப்பட்டு, சென்னை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர்களில் நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுபோல புதுக்கோட்டையிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெரிய பாதிப்பு இருக்காது

இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா கூறுகையில், ‘‘திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் சளி மாதிரி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அந்த நபர் யார்? என்ற விவரம் எங்களுக்கு சென்னையில் இருந்து இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒமைக்ரான் தொற்றால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. விரைவில் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கி விடலாம். அச்சம் கொள்ள தேவையில்லை’’ என்றார்.

கொரோனாவுக்கு 2 பேர் பலி

இந்த நிலையில் திருச்சியில் நேற்று கொரோனா தொற்று 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 123 பேர் உள்ளனர்.

அதே வேளையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் ஆஸ்பத்திரி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments