9ஏ நத்தம்பண்ணை முதுநிலை ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை 9 ஏ நத்தம்பண்ணை முதுநிலை ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஏ நதம்பண்ணை முதுநிலை ஊராட்சியில் 2019 - 2020 ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த  சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை அலுவலர் விஜயராகவன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் பாபு துணைத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய மேற்பார்வையாளர் சுசீந்தரன், ஊராட்சி செயலாளர் புனிதவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments