உயா்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர கலெக்டரிடம் மனு

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், துவார் ஊராட்சியில் ஆரம்பப் பள்ளியாக இயங்கிவந்த பள்ளியானது கடந்த 2013-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இதற்கென தனியாக கட்டிட வசதிகள் ஏதும் இதுவரை செய்து தரப்படாமல் ஆரம்பப்பள்ளி இருந்த கட்டி இடங்களிலேயே தொடர்ந்து உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 108, உயர்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 218 என 326 மாணவ-மாணவிகள் கல்வி பயில்வதாலும் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக சமூக இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும் கடுமையான இடநெருக்கடி இருந்து வருகிறது. ஆகவே துவார் ஊராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதியையும், கழிப்பறை வசதியையும் செய்து தருமாறு பொது மக்களின் சார்பில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments