வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை: வணிக சிலிண்டர் விலை ரூ.103 குறைந்தது எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு




வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.103.50 குறைந்து ரூ.2 ஆயிரத்து 131-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் கியாசின் விலை மாதத்தின் முதல் தேதியிலும் மாற்றி அமைக்கப்படுகின்றன. கியாஸ் விலை சில மாதங்களில் மாதத்துக்கு 2 அல்லது 3 முறையும் மாற்றப்பட்டு உள்ளன.

வணிக சிலிண்டர் விலை குறைப்பு

இதன்படி, கடந்த 3 மாதங்களாக வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 234.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதைக் கண்டித்து அரசியல் கட்சியினரும், வணிக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், இம்மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைக்கப்பட்டுள்ளது.

இல்லதரசிகள் நிம்மதி

கடந்த மாதம் ரூ.2,234.50-க்கு விற்கப்பட்ட வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையை ரூ.103.50 குறைத்து ரூ.2,131 ஆக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளதால், குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. அதன் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்ததற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், மேலும் வணிக சிலிண்டர்களின் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டீக்கடை நடத்துபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments