வயல் நண்டு, நத்தை விற்பவர்களுக்கு பேரூராட்சிக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை
டெல்டா மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வயல் நண்டு, குளத்து நத்தைகளை ஆலங்குடி கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். மருத்துவக் குணம் நிறைந்த நண்டு, நத்தைகளை பொதுமக்கள் விரும்பி, வாங்கி செல்கிறார்கள். இவற்றை பஸ்சில் கொண்டுவர லக்கேஜ் கட்டணம் கொடுக்கிறார்கள். ஆலங்குடி கொண்டுவந்து விற்பவர்களிடமிருந்து ரூ.50, ரூ.100 என குத்தகைதாரர்கள் வரிவசூலிக்கிறார்கள். வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் பிழைக்க வேறு வழி இல்லாமல் இந்த தொழிலைச் செய்கிறார்கள். எனவே பேரூராட்சி எங்களிடமிருந்து விற்பனை வரி வசூலிப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments