தொண்டி - கோட்டைப்பட்டிணம் மாயமான சிறுவன், சிறுமி…. 3 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை…. காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு….!!
தொண்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், சிறுமி இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்களை காணவில்லை என பெற்றோர்கள் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், தலைமை காவலர் முருகன், பெண் காவலர்கள் ஜோதி, முனீஸ்வரி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் உள்ள ஒரு வீட்டில்அவர்கள்  தங்கியிருப்பதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.புகார் அளித்த 3 மணி நேரத்தில் 2 பேரையும் பத்திரமாக மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசாரை பெற்றோர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments