100 முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த செயலி புகாருக்கு பின் முடக்கப்பட்டது
‘புள்ளி பாய்’ என்ற செயலியில் செல்வாக்கான 100 முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தீவிரமாக செயல்படும் முஸ்லிம் பெண் பிரபலங்களையும், முஸ்லிம் பெண் பத்திரிகைகளையும் அடையாளம் கண்டு, அவர்களின் புகைப்படங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ‘சுள்ளி டீல்ஸ்’ என்ற செயலியில் இதுபோலவே சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, இதுகுறித்து மும்பை போலீசில் புகார் செய்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் புகாரை அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, அந்த செயலியை நடத்தி வரும் ‘ஹிட்ஹப்’ என்ற இணையதள நிறுவனம், செயலியை யாரும் பார்க்க முடியாதபடி முடக்கி விட்டது. இத்தகவலை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளும், இந்திய கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழுவும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோல், மும்ைப சைபர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments