பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் குறித்த பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்போன் எண் அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் பின்வரும் அலுவலர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000311, தனி தாசில்தார் (பறக்கும்படை) - 9445045622, புதுக்கோட்டை -தனி தாசில்தார்-9445000312, ஆலங்குடி-தனி தாசில்தார்-9445000313, திருமயம் தாலுகா, வட்ட வழங்கல் அலுவலர் 9445000316, கந்தர்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலர்- 9445000315, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர் 9445000405, 9786254066, இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலர் 9445000319, குளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் 9445000314, விராலிமலை வட்ட வழங்கல் அலுவலர் 9080487553, பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலர் 9445000404, அறந்தாங்கி தனி தாசில்தார் -9445000317, ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் 9445000318, மணமேல்குடி வட்ட வழங்கல் அலுவலர்- 9445000320.

பொங்கல் பரிசு தொகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து சுமார் 4 லட்சத்து 83 ஆயிரத்து 155 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

இந்த பரிசு தொகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும்.

டோக்கன் வினியோகம்

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்க தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினம் ஒன்றுக்கு சுழற்சி முறை–யில் சுமார் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறுவதற்கு ஏதுவாக குறிப்பாக 750 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதில் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகள் வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) செயல்படும். அதற்கு பதிலாக 15-ந் தேதி (சனிக்கிழமை) அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வருகிற மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசை உண்டு.

மேற்கண்ட பொங்கல் பரிசு தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் வினியோகம் செய்து முடிக்க, இப்பணிகளை நாள்தோறும் கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவுக்கும் துணை கலெக்டர் நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், மேற்பார்வை மற்றும் கள அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் பரிசு தொகுப்பை பெறத்தவறியவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பிறகும் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் நேற்று நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments